சர்க்கரை ஆலை ஊழியர் மாயம்

சர்க்கரை ஆலை ஊழியர் மாயம் ஆனார்
சர்க்கரை ஆலை ஊழியர் மாயம்
Published on

புகழூர் ஈ.ஐ.டி. பாரி காலனிய சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நரேஷ்குமார் (வயது 33). இவர் செம்படாபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அரசு வேலை கிடைக்கவில்லை என மனமுடந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வௌயே சென்ற நரேஷ்குமார் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்ல. இதையடுத்து பெற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்ல. இதுகுறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான நரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com