கொளத்தூர் அருகேவிஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

கொளத்தூர் அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொளத்தூர் அருகேவிஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை
Published on

மேட்டூர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தப்பாடி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவருக்கும், ஜெகபிரியா (வயது 22) என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 3-ந் தேதி திருமணம் ஆனது. கணவர் வீட்டில் வசித்து வந்த ஜெகபிரியா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ளவர்களிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். குடும்பத்தினர் ஜெகபிரியாவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெகபிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் ஆகி ஒரு மாதமே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com