தீவட்டிப்பட்டியில் பயணிகள் நிழற்கூடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தீவட்டிப்பட்டியில் பயணிகள் நிழற்கூடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தீவட்டிப்பட்டியில் பயணிகள் நிழற்கூடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஓமலூர்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதில் ஒருவர் தூக்குப்போட்டு தொங்குவதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர் தீவட்டிப்பட்டியை சேர்ந்த காஜாமைதீன் (வயது 55) என்பதும், தொழிலாளியான இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com