போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை

போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 65). இவர் கிருஷ்ணகிரியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இந்த நிலையில் தொழில் காரணமாக கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த ரவிச்சந்திரன் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com