தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

ஓசூர்:

ஓசூர் பாலாஜி நகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் இருவரும் பிரிந்து கடந்த 6 மாதங்களாக தனித்தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் இருந்த சுரேஷ்பாபு நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com