கோடை விடுமுறை: சென்னை, மதுரை கிளை ஐகோர்ட்டுகளுக்கு அவசர வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு, மே 1 முதல் வருகிற 31-ம் தேதி வரை கோடை விடுமுறை என்று தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
கோடை விடுமுறை: சென்னை, மதுரை கிளை ஐகோர்ட்டுகளுக்கு அவசர வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு, நேற்று முதல் வருகிற 31-ம் தேதி வரை கோடை விடுமுறை ஆகும். இந்த காலத்தில், முதல் வாரத்தில் வருகிற 4, 5-ம் தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்களை வருகிற 6, 7-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுக்கப்படும்.

மே மாதத்தின் பிற வாரங்களில், திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் கடைசி வாரத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும்.

விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க, சென்னை ஐகோர்ட்டிற்கும், மதுரை கிளை ஐகோர்ட்டிற்கும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த தேதிகளில் வழக்குகள் விசாரணை நடைபெறுகிறதோ, அந்தந்த தேதிக்கு நீதிபதிகளை பட்டியலிட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com