பாமக தலைவர் அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை..!

அடுத்த 2 வாரங்களுக்கு ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Published on: 

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை

இதுகுறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்பினார். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

அடுத்த 2 வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சி (பிசியோதெரபி) மேற்கொண்டு ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com