உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்
உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
Published on

மேட்டூர் அணையில் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் பிரதி மாதம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனையாளர்களிடமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மதுக்கூர் வட்டாரத்தில் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், 10 தனியார் உர விற்பனை நிலையங்களிலும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பமின்றி கூடுதல் பொருட்களை வழங்கக்கூடாது. அரசு அனுமதித்த விலைக்கு அதிகமாக விலையில் விற்பது தெரிந்தால் உர விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து விவசாயிகளும் தங்களுடைய செல்பேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து தனியார்- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உர இருப்பு, அனைத்து உரங்களின் அரசு நிர்ணயித்த விலை-விதைகளை மானிய விலையில் பெற்று பயன் அடையலாம் என்று கேட்டுக்கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com