தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை

தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை
Published on

ராமநாதபுரம் செந்தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் கதிரவன் (வயது37). இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 தினங்களுக்குமுன் ஒருமாத விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு கார்த்தீஸ்வரி (33) என்ற மனைவியும், சிவசக்தி (12) என்ற மகனும், ஸ்ரீநிதி (8) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை அறையின் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி கதிரவன் இறந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீ சார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர் பாக அவரின் மனைவி கார்த்தீஸ்வரி (33) அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com