சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடை நீக்கம்

நாமக்கல்லில் புகார் கொடுக்க வந்த நபரை ஒருமையில் பேசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடை நீக்கம்
Published on

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

எனவே தடுத்து நிறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் கொடுக்க சென்றனர்.

அப்போது அங்கு நிலைய எழுத்தராக பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அவர்களை ஒருமையில் பேசி அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோரிடம் புகார் கொடுத்தனர்.

பணி இடை நீக்கம்

அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் புகார் கொடுக்க வந்த நபர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவில்லை என்பதும், அநாகரீகமாக நடந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், அவரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com