ஆத்தூர் அருகே தனியார் வங்கி ஊழியர் ஏரியில் மர்மச்சாவு-போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே தனியார் வங்கி ஊழியர் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஆத்தூர் அருகே தனியார் வங்கி ஊழியர் ஏரியில் மர்மச்சாவு-போலீசார் விசாரணை
Published on

ஆத்தூர்:

தனியார் வங்கி ஊழியர்

ஆத்தூர் அருகே நடுவலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில் மகன் சுரேஷ் (வயது 20), இவர், தனியார் வங்கியில் ஊழியராக இருந்தார். இவர், ஆத்தூரில் இருந்து மஞ்சினி செல்லும் வழியில் துலுக்கனூர் ஏரி கரையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து கிடந்த அருகில் ரத்தக்கறை இருந்தது.

தகவல் அறிந்த ஆத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணை

சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷ் இறப்பு குறித்து போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com