தமிழக சட்டசபை தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. அதன்படி, வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 21ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் என 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com