3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது.
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது
Published on

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

மேலும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணி குறித்து அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் கொண்டுவரும் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது அவையில் விவாதம் நடத்தப்படுகிறது. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com