தமிழக தலைமை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழக தலைமை செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழக தலைமை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்பட தமிழக அரசின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தத்தை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தலைமை செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அதேபோல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக செயல்பட்டு வரும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com