

மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு எனும் தனித்துவமான மாநிலம் உருவான நாளை கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு என்ற அடையாளத்திற்காகவும், தமிழ் மொழியின் உரிமைக்காகவும் தங்களின் இன்னுயிரையும் துச்சமென கருதி போராடிய தியாகச் செம்மல்களை நன்றியுடன் நினைவுகூறும் இந்நாளில் தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொன்மையும், தனித்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட நமது தாய்த்தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்டு, நமது மாநிலம் உருவான இந்த நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் மொழி, இலக்கியம், கலை, கட்டிடக்கலை, வீரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருப்பது நமது தமிழ்நாடு. இந்த மண்ணின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும். நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து, வளர்ச்சியிலும் முன்னேறி, வளமான தமிழகத்தை உருவாக்க, இந்த தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.