ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டா. தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு முழு உருவ சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு கோர்ட்டில் தெரிவித்தது. மேலும் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டதாக திருவள்ளூர் கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொற்கொடி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com