தீபாவளிக்கு மறுநாளும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாளான 9-ந்தேதியை விடுமுறை நாளாக, அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
தீபாவளி
Published on: 

சென்னை

தீபாவளிக்கு மறுநாளும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவற்றுக்கான தொடர் விடுமுறை காரணமாக, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக 18.10.2026 அன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

விடுமுறை

அதை ஈடுசெய்யும் விதமாக 21.11.2026 அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தினமான 8-ந்தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) அடுத்த நாளான 9-ந்தேதியை விடுமுறை நாளாக, அதாவது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட 21.11.2026 தேதிக்கு மாற்றாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

அந்த கோரிக்கையை ஏற்று, வரும் 9-ந்தேதியை விடுமுறை நாளாகவும், 21-ந்தேதியை பணி நாளாகவும் அறிவித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X