தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் எந்தவித தளர்வுகள் இன்றி கடுமையான வகையில் பின்பற்றப்பட்டன.

அதன்பின் பொருளாதார முன்னேற்றம், மக்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஓரளவிற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, மாதந்தோறும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ந்தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில், மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com