மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான செலவினங்கள், 2026-2027-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சேர்க்கப்பட இருக்கிறது.
தலமைசெயலகம்
Published on

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லாததாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வறண்ட வானிலை காரணமாகவும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

இந்த சூழலில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில், போர்க்கால அடிப்படையில் குடிநீர் வினியோகப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளை நிறைவு செய்யவும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.288.97 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான செலவினங்கள், 2026-2027-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சேர்க்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் வறட்சி காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com