மேல்மா கிராம சிப்காட் - நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது
மேல்மா கிராம சிப்காட் - நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு
Published on

நில ஆர்ஜிதம் தொடர்பாக நேற்றிரவு 11.30 மணிக்கு மேல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-1.9.2026 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில், சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம்,செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2-ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com