தமிழ்நாடு அரசின் கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் - தங்கம் தென்னரசு

தமிழ் வளர்ச்சித்துறைக்கு வெறும் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார்.
தங்கம் தென்னரசு
Published on

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தவெக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக நான் அப்போது தந்த விளக்கம் இப்போதும் சரியாக உள்ளது. அரசின் கடன் உயரும் என்று கூறினேன்;

தித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியுள்ளார் திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக பட்ஜெட்டில் தந்துள்ளது. "மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவே இல்லை. தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். "மக்கள் எதிர்பார்ப்பை பட்ஜெட் பொய்யாக்கி விட்டது.

ரூ.48,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.55,000 கோடியாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.29 லட்சம் கோடி. தற்போது வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடியாக சரிவு. தமிழ் வளர்ச்சித்துறைக்கு வெறும் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com