‘த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது’ - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

த.வெ.க. அரசியல் செயல்பாட்டை பார்த்து பக்கத்து மாநிலமும் சிரிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
‘த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது’ - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on: 

தர்மபுரி,

தர்மபுரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும். முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குற்ற சம்பவங்கள்

“தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலினை விஜய் கடுமையாக விமர்சித்தார். கடந்த 6 மாத கால த.வெ.க. ஆட்சியில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் அனுபவமின்மையால், தமிழ்நாடு 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. கடந்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் 800 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆட்சியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்காமல், நியாயப்படுத்துகிறார்கள். இது மிகவும் கொடுமை.

போதைப்பொருட்கள்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் ரூ.700 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கி உள்ளன. இதை தமிழ்நாடு போலீசார் பிடிக்கவில்லை. மத்திய அரசின் அதிகாரிகள் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய அன்னிய முதலீடு ஆந்திராவுக்கு செல்கிறது. த.வெ.க. அரசியல் செயல்பாட்டை பார்த்து பக்கத்து மாநிலமும் சிரிக்கிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

X