

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி தவெக - 108, திமுக - 60, அதிமுக 45 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 118 தொகுதிகள் பெரும்பான்மை தேவை. முதல் தேர்தலிலேயே தவெக மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1,12,127 வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 73,044 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.