

சென்னை,
2024-25ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 82.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 43.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 2 மடங்கு அளவில் உயர்ந்து 2024-25ல் 82.5 சதவீதமாக உயர்ந்துள்ளன.
அண்மைக்காலமாக மத்திய அரசு அமைப்புகள் வெளியிட்டுவரும் ஆய்வு அறிக்கைகள் எல்லாம் தமிழ்நாடே முதலிடம் என்பதனை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், திறன்மிகு வகுப்பறைகளை கொண்டுள்ளதிலும் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.