தமிழகம் முழுவதும் தளபதி விஜய்யின் கோட்டை - அமைச்சர் ஆனந்த்

தாராபுரத்தில் அமைச்சர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அமைச்சர் ஆனந்த்
Published on: 

தாராபுரம்,

தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வருகிற 6- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.

இந்த நிலையில், தாராபுரத்தில் அமைச்சர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுவதால் த.வெ.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “த.வெ.க.வின் வெற்றி வாய்ப்பு மிகப் பெரிதாக இருக்கும். எத்தனை முனை போட்டியாக இருந்தாலும், மிகப்பெரிய வெற்றியை த.வெ.க. பெறும்” என்று தெரிவித்தார்.

தளபதி விஜய்யின் கோட்டை

மேலும் அவர் கூறுகையில், “இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் த.வெ.க. மற்றும் தளபதி விஜய்யின் கோட்டையாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவும் சூழலில், த.வெ.க.வின் வெற்றி வாய்ப்பு குறித்து அமைச்சர் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com