தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம்: புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1992 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், தற்போது பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2 கலெக்டர்கள், 2 காவல் ஆணையர்கள் மற்றும் 1 ஐஜியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக விஷு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி மாற்றப்பட்டு, அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமார் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு, அபிஷேக் தீக்‌ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியை மாற்றி, புதிய ஐஜியாக ரம்யா பாரதியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com