தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி

தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி
Published on

சென்னை,

தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.

தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை! நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் கவர்னர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com