வாக்காளர் தீவிர திருத்த பணியால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

தி.மு.க. கூட்டணிக்கு மவுசு அதிகமாக உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
வாக்காளர் தீவிர திருத்த பணியால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்
Published on

கோவை,

கோவை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குகிறது. சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகள் பெறுவது என காங்கிரஸ் மேலிடம் பேசி வருகிறது. எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து மேலிடம் தான் அறிவிக்கும். மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்துக்கு நான் கருத்து கூற முடியாது. வேலூர் கூட்டத்தில் நடிகர் விஜய் என்ன பேசினார் என தெரியவில்லை. அவரது பேச்சை பார்த்துவிட்டு பதில் கூறுகிறேன்.

தமிழகத்தில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் மாறியவர்கள், இறந்தவர்களின் பெயர்கள்தான் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் தீவிர திருத்த பணியால் (எஸ்.ஐ.ஆர்.) தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு இருந்தால் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முனைப்பாக உள்ளன. தி.மு.க. கூட்டணிக்கு மவுசு அதிகமாக உள்ளது. இந்த மிகப்பெரிய கூட்டணி வெற்றி பெறும். வெற்றிகரமாக, சாதுரியமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளார். நிச்சயமாக பெரிய வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com