தீபாவளியை முன்னிட்டு நாளை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிப்பு

வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ரேஷன் கடை
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு ஏதுவாக இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை (06.11.2026) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X