தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படும்! – பேரிடர் அமைப்பு அதிர்ச்சி அறிக்கை

2015 சென்னை வெள்ளம் 6 மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் பாதிப்பு. 18 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படும்! –  பேரிடர் அமைப்பு அதிர்ச்சி அறிக்கை
பேரிடர் அமைப்பு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் நிதி அபாயங்கள் குறித்து சி.டி.ஆர்.ஐ. அமைப்பு (பேரிடர் தாங்கு திறன் உட்கட்டமைப்புக்கான கூட்டணி) ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தை பேரிடர்கள் தாக்கினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.6,000 கோடி இழப்பு

• தமிழகத்தில் ஒரே ஒரு கடும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் கூட, மாநிலத்துக்கு ரூ.6,000 கோடி வரை நேரடி இழப்பு ஏற்படும்.

• வெள்ளம் மற்றும் புயல் போன்ற சீற்றங்களால் தமிழகத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

முடங்கும் உட்கட்டமைப்பு

• பெருவெள்ளம் ஏற்படும் போது மின்சார உட்கட்டமைப்பு, சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கியத்துறைகள் கடுமையாகச் சேதமடைகின்றன.

• இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்குவதுடன், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.

கடந்த கால பாதிப்புகள்

மாநில அரசுக்கு ஏற்படும் நிதிநெருக்கடி குறித்து இந்த ஆய்வில் சில முக்கிய உதாரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

2015 சென்னை வெள்ளம் 6 மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் பாதிப்பு. 18 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். 1.16 லட்சம் வீடுகள் சேதம்.

14,502 கோடி இழப்பு

மேலும், 1.16 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள்சேதமடைந்தன. இந்த வெள்ளத்தால் சுமார்ரூ. 14,502 கோடி இழப்பு ஏற்படும். புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப்பேரிடர்களால் தமிழகத்தின் மின்சார உள்கட்டமைப்பு தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வரு கிறது. 2011-ஆம் ஆண்டு தாக்கிய தானே புயல், 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளம், 2018-ஆம் ஆண்டு தாக்கிய கஜா புயல் ஆகியவை இதற்கு உதாரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சுனாமி

2004-ஆம் ஆண்டு ஏற் பட்ட சுனாமி போன்ற பேரி டர்கள் மாநில அரசின் மொத்த செலவினங்களை கணிசமாக அதிகரிக்கக்கூ டும் என ஆய்வில் மதிப்பி டப்பட்டுள்ளது. சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட் டால்,மாநிலத்தின் மொத்தச் செலவினம் சுமார் ரூ.1, 685.73 கோடி அதிகரிக்கக்கூடும்.

உள்நாட்டு கடன்

இதில் சமூக் சேவைகளுக்கான கூடுதல் செலவினமாக ரூ.205.55 கோடியும், நிவாரண உதவிகளுக்காக ரூ.94.48 கோடியும் அடங் கும். மேலும், உள்நாட்டு கடன் பெற வேண்டிய தேவையும் சுமார் ரூ.291.62 கோடி வரை அதிகரிக்கக்கூடும்.

சுமார் ரூ.167.41 கோடி

2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தை போன்ற பேரிடர் ஏற்பட் டால், அரசின் மொத்த செலவினம் சுமார் ரூ.167.41 கோடி அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பேரிடர் ஏற்பட்ட உடனடியாக அரசின் நிதிச்சுமை அதிகமாக இருந்தாலும், அத னால் ஏற்படும் வாழ்வாதார இழப்புகள், தொழில்பாதிப் புகள் மற்றும் உள்ளூர் பொருளாதார சிக்கல்கள் நீண்டகாலம் நீடிக்கக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீண்டகால பாதிப்பு

பேரிடர் தாக்கியவுடன் அரசுக்கு உடனடியாக ஏற்படும் நிதிச்சுமை ஒருபுறமிருந்தாலும், அதனால் மக்களின் வாழ்வாதார இழப்பு, தொழில் பாதிப்புகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரச் சிக்கல்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என சி.டி.ஆர்.ஐ. அமைப்பு எச்சரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com