

சென்னை,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், நாகாலாந்து, பீகார் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கவர்னரை மாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழக கவர்னராக இருந்த ஆர்.என்.ரவியை, மேற்கு வங்க கவர்னராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரள கவர்னர் ஶ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழ்நாடு கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இமாசல பிரதேச கவர்னர் சிவ் பிரதாப் சுக்லா, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா கவர்னர் ஜிஷ்னு தேவ் வர்மா, மராட்டிய மாநில கவர்னராகவும், நந்த் கிஷோர் யாதவ் நாகாலாந்து கவர்னராகவும், சையத் அட்டா ஹஸ்னைன், பீகார் மாநில கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லடாக் கவர்னர் கவிந்தர் குப்தா இமாசலபிரதேச கவர்னராகவும், டெல்லி கவர்னர் வினய்குமார் சக்சேனா லடாக் கவர்னராகவும், தரன்ஜித் சிங் சந்து டெல்லி கவர்னராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.