நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
Published on

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தஞ்சையில் தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் வீரவிஜயன் தனுஸ்ரீ இணையர் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

1967-க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லாது. அண்ணா ஆட்சிக்கு வந்தப் பிறகு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என தீர்மானம் நிறைவேற்றினார். சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தந்தவர் பேரறிஞர் அண்ணா. நாட்டிலேயே முதன்முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து சட்டமாக்கியது தமிழ்நாடுதான்.

சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது நமது நீண்டநாள் கோரிக்கை. தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கலைஞர். குழந்தைகளுக்கு தமிழில் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com