

புதுடெல்லி
5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்து உள்ளார். மேகாலயா மாநிலத்தின் புதிய கவர்னராக கங்கா பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்திற்கு ஓராண்டுக்குப்பிறகு முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநில கவர்னராக பி.டி. மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பீகார் கவர்னராக சத்யா பால் மாலிக், நியமிக்கபட்டு உள்ளார். அசாம் கவர்னராக ஜெகதீஷ் முகி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள பன்வாரிலால் புரோஹித் காங். சார்பில் 2 முறையும், பாஜக சார்பில் ஒரு முறையும் நாக்பூர் மக்களவை எம்.பியாக பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார் . 2016 இல் அசாமிலும், 2017 இல் மேகாலயாவிலும் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார்.