திருப்பூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

தாராபுரம் பகுதியில் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
திருப்பூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
Published on

பழனி, 

பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 5 நபர்கள் பயணம் செய்தனர். அதைப் போலவே கோவை இருகூர் பகுதியில் இருந்து பழனிக்கு பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மனக்கடவு அருகே அலங்கியம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com