

சென்னை,
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கெண்டு மணமக்களை வாழ்த்தி திருமணத்தை சிறப்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பேருந்து கட்டண உயர்வு என்றாலே மக்களை கண்டிப்பாக பாதிக்கும், அதிலும் மக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு இருக்கும் என்பது திமுக அரசின் அப்பட்டமான பெய் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.