டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு சில அமைப்புகளால் மிரட்டப்படுகின்றனர். அவர்கள் மீது மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளே கடைகளுக்கு நேரடியாக சென்று விற்பனை பணத்தை பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் சி.ஐ.டி.யு. சங்க ஊழியர்கள் ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை மாநிலக்குழு உறுப்பினர் நவீன் சந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி கணேசன், இந்திய கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், சிவகுமார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலசுப்ரமணி நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com