

சென்னை,
தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.