டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
Published on

சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் மற்றும் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கர் வீடுகளில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com