புனித வெள்ளி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

புனித வெள்ளி கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.
புனித வெள்ளி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
Published on

புனித வெள்ளி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவு கூர்ந்து உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.

இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவுகூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.

கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று வரும் 18-4-2025 புனித வெள்ளி அன்று மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com