பரிசல் ஓட்டிகள் போராட்டம் - சுற்றுலாபயணிகள் ஏமாற்றம்


பரிசல் ஓட்டிகள் போராட்டம் - சுற்றுலாபயணிகள் ஏமாற்றம்
x

50,000 கன அடி நீர் வரத்து வரை பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது

சென்னை,

தர்மபுரி மாவட்டம் , ஒகேனக்கல்லில் பரிசலை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் போராட்டம் நடத்தினர். ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், 50,000 கன அடி நீர் வரத்து வரை பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது . இது தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

பரிசலை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் போராட்டம் நடத்தினர் இதனால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

1 More update

Next Story