8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54). இவர் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை உடற்கல்வி அறைக்கு தனியாக வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கு சென்ற மாணவிக்கு மோகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வெளியே ஓடி வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மோகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com