பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியர் சாவு

வந்தவாசியில் பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியர் சாவு
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேனருவி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 56). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி உணவு இடைவேளையின் போது குருமூர்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குருமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆசிரியர் குருமூர்த்தி இறந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com