மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் பலி

சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் பலி
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள தச்சாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40), இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஜாய்ஸ் மேரி என்ற மனைவியும, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் சுதாகர் நேற்று நெடுங்குணத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் தச்சாம்பாடிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சேத்துப்பட்டு- வந்தவாசி சாலையில் உள்ள பைபாஸ் வழியாக வரும்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com