சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெக்னீசியன் மயங்கி விழுந்து சாவு

சென்டிரல் ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து டெக்னீசியன் உயிரிழந்தார்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெக்னீசியன் மயங்கி விழுந்து சாவு
Published on

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் வேலாங்கன் (வயது 47). இவர், எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். வேலாங்கன் நேற்று வழக்கம்போல் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வேலாங்கனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com