நூதன முறையில் செல்போன் பறித்த வாலிபர் கைது

நூதன முறையில் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நூதன முறையில் செல்போன் பறித்த வாலிபர் கைது
Published on

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வீரவநல்லூரை சேர்ந்த முருகேசன் (வயது 37) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவிலை சேர்ந்த பாடலிங்கம் (29) என்பவர் அங்கு வந்தார். அவர் முருகேசனிடம் அவசரமாக போன் பேசி விட்டு தருவதாக சொல்லி அவரது செல்போனை வாங்கினா. ஆனால் அவர் செல்போன் பேசுவது போல் நடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் கையும் களவுமாக பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சப்- இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாடலிங்கத்தை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com