கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
Published on

புதுக்கோட்டை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திலகர் திடல் அருகே சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் புதுக்கோட்டை சிப்காட்டை சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com