சின்னசேலத்தில் ரெயில் மோதி வாலிபர் சாவு

சின்னசேலத்தில் ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
சின்னசேலத்தில் ரெயில் மோதி வாலிபர் சாவு
Published on

சின்னசேலம், 

சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு மகன் சங்கர் (வயது 30). இவர் நேற்று காலை சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் ஒன்று, சங்கர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com