ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

விருத்தாசலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார் .
ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மகன் ஜனார்தனன்(வயது 30). தொழிலாளியான இவர் நேற்று வயலூர் ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி இறந்தார்.

இதுபற்றிய தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com