மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Published on

நண்பர்கள்

அன்னவாசல் அருகே புதூர் குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் தினேஷ் (வயது 21). இவரது நண்பர் இலுப்பூர் பாப்பான்குடியை சேர்ந்த அஜீத்குமார் (22). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஜீத்குமார் ஓட்டினார்.

புல்வயல் அருகே புதுக்கோட்டை-வயலோகம் சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் பலி

இதில் தினேஷ், அஜீத்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்தவழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com