வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை
Published on

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 23). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட மகேந்திரனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனை சட்டம் 363-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com